கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்: மயங்க் அகர்வால் சதத்தால் இந்திய ‘பி’ அணி வெற்றி + "||" + One Day Cricket: Mayang Aggarwal by cent Indian B 'team win

ஒருநாள் கிரிக்கெட்: மயங்க் அகர்வால் சதத்தால் இந்திய ‘பி’ அணி வெற்றி

ஒருநாள் கிரிக்கெட்: மயங்க் அகர்வால் சதத்தால் இந்திய ‘பி’ அணி வெற்றி
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மயங்க் அகர்வால் சதத்தால் இந்திய ‘பி’ அணி வெற்றிபெற்றது.
பெங்களூரு,

இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியா ‘ஏ’-இந்தியா ‘பி’ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி 49 ஓவர்களில் 217 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

அம்பத்தி ராயுடு 48 ரன்னும், கவுதம் 35 ரன்னும், சஞ்சு சாம்சன் 32 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 20 ரன்னும் எடுத்தனர். இந்தியா ‘பி’ அணி தரப்பில் கிருஷ்ணா 4 விக்கெட்டும், ஸ்ரீரேயாஸ் கோபால் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய இந்திய ‘பி’ அணி 41.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மயங்க் அகர்வால் 124 ரன்கள் குவித்தார்.