கிரிக்கெட்

வரதட்சணைக்கேட்டு துன்புறுத்துவதாக வங்காளதேச கிரிக்கெட் வீரர் மீது மனைவி புகார் + "||" + Bangladeshi cricketer's wife accuses him of torture over dowry

வரதட்சணைக்கேட்டு துன்புறுத்துவதாக வங்காளதேச கிரிக்கெட் வீரர் மீது மனைவி புகார்

வரதட்சணைக்கேட்டு துன்புறுத்துவதாக வங்காளதேச கிரிக்கெட் வீரர் மீது மனைவி புகார்
வரதட்சணைக்கேட்டு துன்புறுத்துவதாக வங்காளதேச கிரிக்கெட் வீரர் மீது அவரது மனைவி புகார் தெரிவித்துள்ளார்.
டாக்கா,  

வங்காளதேச கிரிக்கெட் அணியின் இளம் வீரர் மோசதேக் ஹூசைன் சைகாத்( வயது 22). வரும் செப்டம்பர் 13 ஆம் முதல் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்காளதேச அணியில் மோசதேக் ஹூசைன் சைகாத் இடம் பெற்றுள்ளார். 

இந்த நிலையில், மொசதேக் ஹூசைன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் தொடுத்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடைபெற்றதாகவும் தற்போது வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியில் அனுப்பி துன்புறுத்துவதாக, அவரது  மனைவி சர்மின் சமிரா உஷா புகார் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, அங்குள்ள கூடுதல் மாஜிஸ்திரேட்டு நீதிபதி, இந்த புகார் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளார். இந்தப்புகார் குறித்து, கருத்து கேட்க மோசேதேக் ஹூசைனை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

ஆனால், ஹூசைனின் சகோதரர் மோசாபர் ஹூசைன், இச்சம்பவம் குறித்து கூறும் போது, திருமணானதில் இருந்தே அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியதாகவும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சமிரா உஷாவுக்கு மோசேதேக் ஹூசைன் விவகாரத்து கடிதம் வழங்கியதாகவும், ஆனால், திருமண பத்திரத்தில் குறிப்பிட்ட தொகையை விட கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்றும் சமிரா உஷா கேட்டதாகவும், கேட்ட தொகை கிடைக்காததையடுத்து, தவறான புகாரை அளித்துள்ளதாகவும் மோசாபர் ஹூசைன் தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஜிம்பாப்வே அணிக்கு 443 ரன்கள் இலக்கு
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு 443 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
2. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல்-அவுட்
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
3. உலகைச்சுற்றி....
வங்காளதேசத்தில் அடுத்த மாதம் 23-ந் தேதி பொது தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
4. உலகைச் சுற்றி...
வங்காளதேசத்தில் அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி ஆதரவு பத்திரிகை ஆசிரியர் உசேன் கைது செய்யப்பட்டுள்ளார்.
5. வங்காளதேச பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீசிய வழக்கு: 19 பேருக்கு மரண தண்டனை, 19 பேருக்கு ஆயுள்
வங்காளதேச பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீசிய வழக்கில் 19 பேருக்கு மரண தண்டனையும் 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.