கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ; 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல் + "||" + 4th Test, India tour of Ireland and England at Southampton,

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ; 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ; 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறி வருகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் இன்று  தொடங்குகியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு அணி வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கி உள்ளனர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது. பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆட்டத்தில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் ரூட் 4 ரன்களில் இஷாந்த் சர்மா ஓவரில் வெளியேறினார். இங்கிலாந்து அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

தொடர்ந்து விளையாடிய  இங்கிலாந்து 57 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பூம்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட் வீரர் மைதானத்தில் சுருண்டு விழுந்து பலி
கோவா ரஞ்சி கிரிக்கெட் அணியின் வீரர் கிரிக்கெட் விளையாடியபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
2. இந்தியா - ஆஸ்திரேலியா 4-வது டெஸ்ட் போட்டிக்கான 13 இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு
சிட்னியில் நாளை நடைபெறவுள்ள 4-வது டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்களின் பெயர் பட்டியலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
3. மிதாலி ராஜூக்கு ஏற்பட்ட நிலைமையே எனக்கும் ஏற்பட்டது சவுரவ் கங்குலி வருத்தம்
தன்னையும் நல்ல பார்மில் இருக்கும்போதே அணியில் சேர்க்காமல் அமர வைத்தார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
4. ராஜ்கோட் டெஸ்ட் :குல்தீப் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்; இந்தியா அபார வெற்றி
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
5. இங்கிலாந்துக்கு எதிரான 5 வது டெஸ்ட்: 5 முறையும் டாஸ் தோற்ற கோலி செய்த காமெடி
5 முறையும் டாஸ் தோற்ற கோலி நாணயத்தின் இரண்டு பக்கமும் தலை இருந்தால் தான் நான் டாஸ் ஜெயிக்கமுடியும் போல? என காமெடி செய்தார் கோலி .