கிரிக்கெட்

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சொத்து மதிப்பு எவ்வளவு? + "||" + The Net Worth Of Ravichandran Ashwin

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சொத்து மதிப்பு எவ்வளவு?

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சொத்து மதிப்பு எவ்வளவு?
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சொத்து மதிப்பு எவ்வளவு? என தகவல் வெளியாகி உள்ளது. #RavichandranAshwin

இந்திய அணியில் தற்போது நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருப்பவர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த 5-6 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து சுழற்பந்து வீச்சின் மூலம் தாக்குதல் முன்னெடுத்து மற்றும் வேலை போன்றவைகள் காரணமாக தற்போது மிகுந்த செல்வாக்கு மிக்க வீரராக உள்ளார்.

இதனால் அவரது மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், அவர் தற்போது பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதனால் அவரது சொத்து மதிப்பு, சம்பளம் மற்றும் இதர வருவாய்களை பற்றி இங்கு பார்ப்போம். கடந்த 2010-ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியபிறகு, அஸ்வின் சர்வதேச அளவில் அறிமுகமானார்.

அதன் பின் இந்திய அணி பல வெற்றி பெருவதற்கு முக்கிய காரணமாகவும் இவர் இருந்து வருகிறார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்ற அவர் டெஸ்ட் தொடரில் அறிமுக போட்டியிலே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது இந்தியராக ஆனார்.

அவர் இரண்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த தொடரில் ஒரு சதத்தை அடித்தார் மற்றும் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

அதன் தன்னுடைய தொடர் திறமையான பந்து வீச்சு மூலம் 2013-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில், 29 விக்கெட்டுகளை எடுத்தார்.

விளையாட்டின் மிக நீண்ட வடிவமான டெஸ்ட் அரங்கில் அவர் நான்கு சதங்கள் அடித்தார். 2014-ஆம் ஆண்டில், அர்ஜுனா விருது வென்றார் மற்றும் 2012-13 பருவத்தில் பி.சி.சி.ஐயின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராகப் பெற்றார். 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும், 2016-ம் ஆண்டு சிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதையும் வென்றார்.

இப்படி பல சாதனைகள் படைத்துள்ள அஸ்வினுக்கு முக்கிய வருமானம் போட்டியின் கட்டணம், விளம்பரதூதர் மற்றும் தனிப்பட்ட முதலீடுகளிலிருந்து வருகிறது.பல உயர்ரக ஆடம்பர கார்கள் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை சொந்தமாக கொண்டிருக்கிறார். ராம்ராஜ், லினென், மூவ் ஸ்ப்ரே போன்ற பிராண்டுகளை அவர் ஒப்புக் கொண்டார்


சொத்து  மதிப்பு 115 கோடி
தனிப்பட்ட சொத்து   26 கோடி
சொகுசு கார்கள் சொந்தமானது 2.6 கோடி
ஐபிஎல் சம்பளம் 12.5 கோடி
ஒருநாள் போட்டி கட்டணம் 3,00,000
டெஸ்ட் போட்டி கட்டணம் 5,00,000

 

அஸ்வின் ஆண்டு வருவாய் 
2016- ரூ 21 கோடி, 2015- ரூ18 கோடி, 2014-ரூ.14 கோடி,2013-ரூ.7 கோடி,2012-ரூ.5 கோடி