கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் ஓய்வு + "||" + England's Alastair Cook to retire from international cricket: news agency AFP

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து  இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் ஓய்வு
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் அறிவித்துள்ளார். #Cook
லண்டன்,

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலய்ஸ்டர் குக் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்டுடன் ஓய்வு பெறுவதாக குக் அறிவித்துள்ளார். 

33-வயதான குக், 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்கள், 56 அரைசதங்கள் அடித்துள்ளார்.  அதேபோல், 92 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குக், 5 சதங்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகவும் திகழந்து வந்த குக், கடந்த 2016 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். 

சமீப காலமாக பார்ம் இன்றி தவித்து வரும் குக், இந்தியாவுக்கு எதிரான தொடரில் ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார். இதனால், அணியில் குக்கின் இடம் கேள்விக்குள்ளான நிலையில், ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: பும்ராவுக்கு ஓய்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
3. ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
4. டிராவை நோக்கி சிட்னி டெஸ்ட்: 5-ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு
இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்கிறது.
5. சிட்னி டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் சேர்த்துள்ளது.