கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் இஷான் மணி + "||" + Ishan Mani to head Pakistani Cricket Board

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் இஷான் மணி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் இஷான் மணி
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவராக இஷான் மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த நஜம் சேத்தி கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அந்த பதவிக்கு இஷான் மணி நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 73 வயதான இஷான் மணி ஏற்கனவே ஐ.சி.சி. தலைவராகவும் இருந்துள்ளார். தங்களுடன் இந்திய அணி நேரடி கிரிக்கெட் தொடர்களில் விளையாட மறுப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நஷ்டஈடு கேட்டு வருகிறது. அது தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே இஷான் மணியின் உடனடி பணியாக இருக்கும்.