கிரிக்கெட்

பெங்களூரு அணியின் பயிற்சியாளராக நெஹரா நியமனம் + "||" + Nehara appointed as the coach of Bangalore team

பெங்களூரு அணியின் பயிற்சியாளராக நெஹரா நியமனம்

பெங்களூரு அணியின் பயிற்சியாளராக நெஹரா நியமனம்
பெங்களூரு அணியின் பயிற்சியாளராக நெஹரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த வெட்டோரி (நியூசிலாந்து) மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து கேரி கிர்ஸ்டன் (தென்ஆப்பிரிக்கா) புதிய தலைமை பயிற்சியாளராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக கடந்த ஆண்டு பணியாற்றிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹரா அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் நேற்று தெரிவித்தது.