கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி இல்லாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும் - பாக்.பந்து வீச்சாளர் சொல்கிறார் + "||" + Asia Cup: Virat Kohli Is A Legend, His Absence Will Be An Advantage, Says Pakistan Pacer

ஆசிய கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி இல்லாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும் - பாக்.பந்து வீச்சாளர் சொல்கிறார்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி இல்லாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும் - பாக்.பந்து வீச்சாளர் சொல்கிறார்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி இல்லாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இஸ்லமாபாத், 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்தப்போட்டி தொடரில், பங்கேற்கும் இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரோகித்சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த போட்டித்தொடரில், 19 ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இந்தப்போட்டி மீதே உள்ளது. இந்த நிலையில், இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹசன் அலி, விராட் கோலி இந்திய அணியில் இல்லாதது எங்களுக்கு சாதகமான அம்சம் என்று தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஹாசன் அலி கூறியிருப்பதாவது:- விராட் கோலி ஒரு லெஜண்ட், அவரை எந்த ஒரு வீரருடனும் ஒப்பிட முடியாது. நான் எனது உடல் தகுதி மீதே கவனம் செலுத்துகிறேன். ஏனெனில் அதுவே, எனது தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவும். தற்போது, இந்திய அணியை விட பாகிஸ்தான் அணியே பலமிக்கதாக உள்ளது என நான் நினைக்கிறேன். கடைசியாக எங்களுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், இந்திய அணி  பலத்த நெருக்கடியுடன் இந்த போட்டியை எதிர்கொள்ளும். ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை, நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் விளையாடுவது போல் உள்ள சூழலில் உள்ளோம். ஏனெனில் நீண்ட காலமாக அங்கு விளையாடி வருகிறோம்” என்றார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளராக வலம் வரும் ஹசன் அலி 33 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐசிசி பந்து வீச்சாளர்  தரவரிசையில் தற்போது 3-வது இடத்தில் உள்ளார்.