கிரிக்கெட்

ரவி சாஸ்திரியின் கருத்துக்கு - அசாருதீன்-கங்குலி பதிலடி + "||" + Immature Comments’: Ganguly Laughs Off Shastri’s Team Comparisons

ரவி சாஸ்திரியின் கருத்துக்கு - அசாருதீன்-கங்குலி பதிலடி

ரவி சாஸ்திரியின் கருத்துக்கு - அசாருதீன்-கங்குலி பதிலடி
ரவி சாஸ்திரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கங்குலி, சாஸ்திரி மெச்சூரிட்டி இல்லாமல் பேசுகிறார் என கூறி உள்ளார். #Shastri #Ganguly
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தற்பெருமை பேசுவதிலேயே குறியாக இருக்கிறார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி வெளிநாடுகளில் சோபிக்கவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தற்போது இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.

இதையடுத்து ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் தற்போதைய இந்திய அணி தான் சிறந்த டிராவலிங் அணி என மார்தட்டுகிறார். கடந்த 20 ஆண்டுகளில் தற்போதைய இந்திய அணி தான் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடுகிறது என்று கருத்து தெரிவித்தார் ரவி சாஸ்திரி.

ரவி சாஸ்திரியின் கருத்தை அவரது நண்பரான கவாஸ்கரால் கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை. ரவி சாஸ்திரிக்கு, டிராவிட் தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் பெற்ற வெற்றிகளை லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்தார் கவாஸ்கர்.

கடந்த 20 ஆண்டுகளில் இதுதான் சிறந்த அணி என கூறியிருக்கும் ரவி சாஸ்திரி, இதற்கு முன்னதாக வேறு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது, குறிப்பிட்ட காலம் எதையுமே குறிப்பிடாமல், தற்போதைய இந்திய அணி தான் சிறந்த அணி என கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு, அசாருதீன் தக்க பதிலடி கொடுத்திருந்தார். அதாவது, இதுதான் சிறந்த அணி என்று கூறுவதன் மூலம் ரவி சாஸ்திரி தன்னையும் தான் ஆடியபோது இருந்த அணியையும் அவரது திறமையையும் மதிப்பையும் அவரே குறைத்து கொள்கிறார் என கருத்து தெரிவித்திருந்தார்.

அசாருதீனின் பதிலடியில் இருந்த நியாயத்தை உணர்ந்த ரவி சாஸ்திரி, இந்த முறை அவர் ஆடிய காலத்திற்கு பிறகான இந்திய அணியை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசினார். அவர் ஆடிய காலத்தை விடுத்து, கடந்த 20 ஆண்டுகளில் இருந்த அணியை விட தற்போதைய அணிதான் சிறந்தது என தெரிவித்தார். ரவி சாஸ்திரியின் இந்த கருத்துக்கும் கவாஸ்கர், கங்குலி என வரிந்துகட்டி கொண்டு பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், ரவி சாஸ்திரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கங்குலி, சாஸ்திரி மெச்சூரிட்டி இல்லாமல் பேசுகிறார். அதுபோன்ற கருத்துகளை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிட்டால், அது மெச்சூரிட்டி இல்லாத செயல்தான். அனைவருமே இந்தியாவிற்காக ஆடுகிறார்கள். எனவே வீரர்கள் கடைசி போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற வேண்டும் என கங்குலி தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய கோலி : இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி
இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய விராட் கோலியின் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் உள்ளது.
2. ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்கள்
ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி நியூசிலாந்து வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
3. அசாருதீனுக்கு கவுரவம் பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம்
கொல்கத்தா இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் அசாருதீனுக்கு கவுரவம் அளிதததர்கு பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம் வைத்துள்ளார்.
4. 30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி
30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி க்கு விளையாட்டு வீரர்கள் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdayVirat
5. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வு
பாகிஸ்தான் கேப்டனாக சில காலம் இருந்த அசார் அலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்தார்.