கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு + "||" + England wins the toss and elects to bat first in the 5th Test at The Oval.

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்:  டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு
இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #ENGvIND
லண்டன், 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்துள்ள 4 டெஸ்டுகளில் 3-ல் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்றுதொடங்கியது. இதில் 
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

 இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற போதிலும் தொடரை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பதில் இரு அணி வீரர்களும் தீவிரமாக இருக்கிறார்கள்.

இந்திய அணி பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் 194 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் 31 ரன்கள் வித்தியாசத்தில் சரண் அடைந்தது. 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 60 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது. நாட்டிங்காமில் நடந்த 3-வது டெஸ்டில் மட்டும் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்டில் இந்திய அணி வாகை சூடினால், 1986-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் 2 டெஸ்டுகளில் வெற்றி பெற்ற பெருமை இந்திய அணிக்கு கிடைக்கும். மொத்தத்தில் இந்திய அணி ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்குமா? அல்லது மறுபடியும் அடங்கிப்போகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பான்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா அல்லது ஹனுமா விஹாரி, பும்ரா அல்லது ஷர்துல் தாகூர், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா.

இங்கிலாந்து: அலஸ்டயர் குக், ஜென்னிங்ஸ், மொயீன் அலி, ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் குர்ரன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், அடில் ரஷித்.