கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 5 வது டெஸ்ட்: 5 முறையும் டாஸ் தோற்ற கோலி செய்த காமெடி + "||" + 5th Test against England 5 times the comedy of the dossier

இங்கிலாந்துக்கு எதிரான 5 வது டெஸ்ட்: 5 முறையும் டாஸ் தோற்ற கோலி செய்த காமெடி

இங்கிலாந்துக்கு எதிரான 5 வது டெஸ்ட்: 5 முறையும் டாஸ் தோற்ற  கோலி செய்த காமெடி
5 முறையும் டாஸ் தோற்ற கோலி நாணயத்தின் இரண்டு பக்கமும் தலை இருந்தால் தான் நான் டாஸ் ஜெயிக்கமுடியும் போல? என காமெடி செய்தார் கோலி .
லண்டன், 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்துள்ள 4 டெஸ்டுகளில் 3-ல் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்றுதொடங்கியது. இதில் 
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து  ஆடிவருகிறது.

முதல் நான்கு போட்டிகளிலும் டாஸ் தோற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இந்த முறையும் டாஸில் தோற்றார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் போட்டார். விராட் கோலி, ஹெட்(தலை) கேட்டார். ஆனால் டெய்ல் விழுந்ததால் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது.

முதல் நான்கு போட்டிகளில் டாஸ் தோற்ற கோலி, கடைசி போட்டியிலும் டாஸில் தோற்றார். டாஸ் போட்டபிறகு பேசிய கோலி, நாணயத்தின்  இரண்டு பக்கமும் தலை இருந்தால்தான் நான் டாஸ் ஜெயிக்கமுடியும் போல? என காமெடி செய்தார்.