கிரிக்கெட்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட டிவில்லியர்ஸ் ஒப்பந்தம் + "||" + Pakistan Super League Play Devillers in Agreement

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட டிவில்லியர்ஸ் ஒப்பந்தம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட டிவில்லியர்ஸ் ஒப்பந்தம்
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட டிவில்லியர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தென்ஆப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ், அடுத்த ஆண்டு நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். வீரர்கள் ஒதுக்கீட்டின் போது அவர் எந்த அணியில் இடம் பெறுவார் என்பது தெரிய வரும். இது குறித்து 34 வயதான டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘உலக அரங்கில் வளர்ச்சியடைந்துள்ள முன்னணி 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கும் ஒன்று. இந்த போட்டியை சில ஆண்டுகளாக பார்த்து ரசித்துள்ளேன். வரும் சீசனில் நானும் கால்பதிக்க ஆவலாக இருக்கிறேன்’ என்றார்.