கிரிக்கெட்

உன்னை நினைத்து பெருமையாக உள்ளது மகள் குறித்து சச்சின் தெண்டுல்கர் + "||" + Anjali and I are so proud of you!-Sachin Tendulkar

உன்னை நினைத்து பெருமையாக உள்ளது மகள் குறித்து சச்சின் தெண்டுல்கர்

உன்னை நினைத்து பெருமையாக உள்ளது மகள் குறித்து சச்சின் தெண்டுல்கர்
உன்னை நினைத்து பெருமையாக உள்ளது என மகள் குறித்து சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் கூறி உள்ளார்
லண்டன் பல்கலைக்கழகத்தில் (University College of London) சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, மருத்துவப் பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் தந்து டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

லண்டன் பல்கலைக்கழகத்தில் படிக்க நேற்றுதான் வீட்டைவிட்டுச் சென்றமாதிரி உள்ளது. இப்போது நீ பட்டதாரி ஆகிவிட்டாய். அஞ்சலியும் நானும் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். வெளியே சென்று உலகை வெல் சாரா என்று உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார் சச்சின்.

சச்சினின் மனைவி அஞ்சலி, ஒரு மருத்துவர். இதையடுத்து தன் தாயைப் போலவே லண்டன் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவம் படித்துமுடித்துள்ளார். சச்சின் - அஞ்சலியின் மகன் அர்ஜூன், கிரிக்கெட் வீரராக உள்ளார். சமீபத்தில் அவர் இந்திய இளையோர் அணிக்குத் தேர்வாகினார்.