கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட்: ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 114/2 + "||" + 5th Test against India: England at 114/2 at the end of the match

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட்: ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 114/2

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட்: ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 114/2
இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்துள்ளது. #INDVsENG
லண்டன்,

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 332 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது. இதில் ஹனுமா விஹாரி 25 ரன்னுடனும், ஜடேஜா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற 3வது நாள் ஆட்டத்தில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹனுமா விஹாரி அறிமுக போட்டியிலேயே அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷாந்த் ஷர்மா 4 ரன்னிலும், ஷமி 1 ரன்னிலும், பும்ரா (0) ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இந்தியா 95 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆண்டர்சன், ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 40 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் குக் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். அவருடன் களமிறங்கிய ஜென்னிங்ஸ் 10 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து மொயின் அலி 20 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் குக்-உடன், கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தியது.

இறுதியில் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் குக் 46 ரன்களுடனும், ரூட் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் சமி, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இந்திய அணியை விட 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி நாளை 4ம் நாள் ஆட்டத்தை தொடர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரிப்பு - மத்திய அரசு
இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு
உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் தென்பட்டதை அடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
3. கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு
கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவுக்கு 213 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
4. இந்தியாவுக்கு எதிரான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
5. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு - ஸ்டார்க், மிட்செல் மார்சுக்கு இடமில்லை
இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஸ்டார்க், மிட்செல் மார்சுக்கு இடம் கிடைக்கவில்லை.

அதிகம் வாசிக்கப்பட்டவை