கிரிக்கெட்

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவிடம் சுருண்டது இலங்கை + "||" + Women's One Day Cricket: India Recoiled srilanka

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவிடம் சுருண்டது இலங்கை

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவிடம் சுருண்டது இலங்கை
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

காலே, 

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் போட்டியின் முடிவுகள் பெண்கள் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் கொள்ளப்படும்.

இந்தியா – இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி காலேவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 35.1 ஓவர்களில் 98 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சமாரி அட்டப்பட்டு 33 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் மன்சி ஜோஷி 3 விக்கெட்டுகளும், கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இந்தியா 19.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிர்தி மந்தனா 73 ரன்கள் (76 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். 2–வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.



தொடர்புடைய செய்திகள்

1. வீராட் கோலி-மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை
கிரிக்கெட் வீரர் வீராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி
இந்தியா – இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டுநாயகேவில் நேற்று நடந்தது.
3. 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இலங்கை–வங்காளதேசம் மோதல்
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது.
4. இலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி
இலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்ற
5. ‘இந்திய கிரிக்கெட் அணி முன்னேற்றம் காண வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்’ விராட்கோலிக்கு, கங்குலி அறிவுரை
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1–4 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.