கிரிக்கெட்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் பயிற்சி ஆட்டங்கள் தேவை இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி + "||" + Before the Australian Test series Training games are required

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் பயிற்சி ஆட்டங்கள் தேவை இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் பயிற்சி ஆட்டங்கள் தேவை இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
இங்கிலாந்து தொடரில் நாட்டிங்காமில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றோம். லார்ட்ஸ் போட்டியை தவிர மற்ற 3 டெஸ்டிலும் நெருங்கி வந்து தோற்றோம்.

புதுடெல்லி, 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1–4 என்ற கணக்கில் இழந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

இங்கிலாந்து தொடரில் நாட்டிங்காமில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றோம். லார்ட்ஸ் போட்டியை தவிர மற்ற 3 டெஸ்டிலும் நெருங்கி வந்து தோற்றோம். இதை அனைவரும் அறிவர். இந்த தொடரில் நிறைய சாதகமான வி‌ஷயங்களை எடுத்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் இலக்கை நெருங்கி வந்து, அதை வெற்றியாக மாற்ற முடியாமல் போவதில் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். அது குறித்து ஆலோசித்துள்ளோம்.

இங்கிலாந்திடம் நாங்கள் மிக மோசமாக தோற்றோம் என்று சொல்லமாட்டேன். எல்லா வகையிலும் நாங்கள் கடுமையாக முயற்சித்தோம். ஆனால் நன்றாக விளையாடியவர்களை பாராட்டியாக வேண்டும். இங்கிலாந்து அணியில் இருந்து ஒருவரை தொடர்நாயகன் விருதுக்கு தேர்வு செய்யுங்கள் என்று என்னையும், விராட் கோலியையும் கேட்டிருந்தால் நாங்கள் ஆல்–ரவுண்டர் சாம்குர்ரனை தேர்வு செய்திருப்போம். இங்கிலாந்து அணியில் எங்களுக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது அவர்தான். முதலாவது டெஸ்டின் 2–வது இன்னிங்சில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்த போதும், 4–வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்த போதும் அவர் தான் அரைசதம் அடித்து தங்கள் அணியை காப்பாற்றினார். அதே போல் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இது தான் இரு அணிகளுக்கு இடையிலான வித்தியாசமாகும்.

பயிற்சி ஆட்டங்களில் விளையாட நாங்கள் தயங்கவில்லை. நவம்பர் மாதம் தொடங்கும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் இருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் அதற்கு போதிய அவகாசம் இருக்கிறதா? என்பது தான் கேள்வி.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.