கிரிக்கெட்

ஆசிய கோப்பை முதல் போட்டி ; இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங் + "||" + Bangladesh have won the toss and elected to bat first against Sri Lanka.

ஆசிய கோப்பை முதல் போட்டி ; இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங்

ஆசிய கோப்பை முதல் போட்டி ; இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங்
ஆசிய கோப்பை முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது. #BANvSL #AsiaCup
துபாய்,

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் வங்காள தேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது


வங்காள தேச வீரர்கள்

தமீம் இக்பால், லிட்டான் தாஸ், ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா, முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்),  முகம்மது மிதுன், மொசாடெக் ஹூசைன், மீடிய ஹசன், மஷ்ரப்த மொர்டாசா (கேப்டன்), ரூபல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரஹ்மான்.

இலங்கை வீரர்கள்

உபுல் தரங்க, தனஞ்ஜெய   டி சில்வா, குசால் பெரேரா ( கேப்டன்), குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் ( விக்கெட் கீப்பர்), திசரா பெரேரா, தசுன் ஷனகா, லசித் மலிங்கா,சரங்கா லக்மால், அமிலா அபோன்சா தில்ருவன் பெரேரா.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 19ம் தேதி நடக்கிறது. அதற்கு முதல்நாள், இந்திய அணி ஹாங்காங்குடன் மோதுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஓராண்டுக்கு பிறகு மோத உள்ளதால், இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார்.