கிரிக்கெட்

காதலியை மணந்தார், ஸ்டீவன் சுமித் + "||" + Married lover, Steven Sumith

காதலியை மணந்தார், ஸ்டீவன் சுமித்

காதலியை மணந்தார், ஸ்டீவன் சுமித்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை நடவடிக்கைக்கு உள்ளானார்.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை நடவடிக்கைக்கு உள்ளானார். இதனால் அவரால் மார்ச் மாதம் தான் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப முடியும். இந்த நிலையில் 29 வயதான ஸ்டீவன் சுமித், தனது நீண்ட கால காதலி டேனி வில்லிசை நேற்று கரம் பிடித்தார்.

சட்டப்படிப்பு படித்துள்ள டேனி வில்லிசை 2011–ம் ஆண்டு சிட்னியில் உள்ள மதுபான விடுதியில் முதல்முறையாக சந்தித்த ஸ்டீவன் சுமித், அதில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. அந்த காதல் தற்போது திருமண பந்தத்தில் முடிந்துள்ளது. ஸ்டீவன் சுமித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எனது சிறந்த தோழியை இன்று (நேற்று) திருமணம் செய்துள்ளேன். இது எனக்கு நம்ப முடியாத, மறக்க முடியாத நாள்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆரோன் பிஞ்ச், கவாஜா, மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.


ஆசிரியரின் தேர்வுகள்...