பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி


பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி
x
தினத்தந்தி 16 Sep 2018 9:30 PM GMT (Updated: 16 Sep 2018 8:25 PM GMT)

இந்தியா – இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டுநாயகேவில் நேற்று நடந்தது.

கட்டுநாயகே, 

இந்தியா – இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டுநாயகேவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. தனது 7–வது சதத்தை எட்டிய கேப்டன் மிதாலிராஜ் 125 ரன்களுடன் (143 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மிதாலியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மந்தனா 51 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 257 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. கேப்டன் சமாரி அட்டப்பட்டு 115 ரன்கள் (133 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். இலங்கைக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் ஒரு நாள் தொடரை இந்தியா 2–1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story