கிரிக்கெட்

‘கோலி இல்லாவிட்டாலும் வெற்றி பெற முடியும்’ இந்திய வீரர் அம்பத்தி ராயுடு பேட்டி + "||" + 'You can win without a goalie' Interview with Ambati Rayudu

‘கோலி இல்லாவிட்டாலும் வெற்றி பெற முடியும்’ இந்திய வீரர் அம்பத்தி ராயுடு பேட்டி

‘கோலி இல்லாவிட்டாலும் வெற்றி பெற முடியும்’ இந்திய வீரர் அம்பத்தி ராயுடு பேட்டி
இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஆசிய போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் இல்லாதது நிச்சயம் மிகப்பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.

துபாய், 

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதலாவது லீக்கில் ஹாங்காங் அணியை நாளை சந்திக்க உள்ள நிலையில் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஆசிய போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் இல்லாதது நிச்சயம் மிகப்பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் அவர் இல்லாவிட்டாலும் வெற்றி பெறுவதற்குரிய போதுமான திறமை நம்மிடம் உள்ளது. டோனி, இந்தியாவின் கேப்டன் ஆவார். அவர் அணியில் உள்ள அனைவருக்கும் எப்போதும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டியாக இருக்கிறார். எனக்கும், நல்ல நிலையை எட்டுவதற்கு நிறைய உதவி செய்துள்ளார். இந்திய அணியில் மிடில் வரிசையில் நிரந்தர இடத்தை பிடிப்பது குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது அவ்வளவு தான். மற்றபடி இதை பற்றி அதிகமாக நினைத்து எனக்குள் நெருக்கடியை உருவாக்க விரும்பவில்லை.

இப்போது உலக கோப்பை குறித்து யாரும் நினைத்து கொண்டிருக்கவில்லை. தற்போது ஆசிய கோப்பை போட்டியில் விளையாடி இருக்கிறோம். அதன் மீதே முழு கவனமும் உள்ளது.

ஹாங்காங்குடன் விளையாடி விட்டு ஓய்வின்றி மறுநாளே பாகிஸ்தானை சந்திப்பதை எங்களுக்கு பாதகமான வி‌ஷயமாக நினைக்கவில்லை. அடுத்தடுத்த நாட்களில் ஆடுவது கடினம் தான். ஆனாலும் முதல் நாளில் விளையாடி விட்டு, சோர்வில் இருந்து மீண்டு பாகிஸ்தானுக்கு எதிராக புத்துணர்ச்சியுடன் களம் இறங்குவோம்.

இவ்வாறு அம்பத்தி ராயுடு கூறினார்.