கிரிக்கெட்

மாரத்தானில் கென்ய வீரர் உலக சாதனை + "||" + In Marathon Kenyan player world record

மாரத்தானில் கென்ய வீரர் உலக சாதனை

மாரத்தானில் கென்ய வீரர் உலக சாதனை
கென்யாவின் எலியாட் கிப்சோஜ் 2 மணி ஒரு நிமிடம் 39 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

பெர்லின், 

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கென்யாவின் எலியாட் கிப்சோஜ் 2 மணி ஒரு நிமிடம் 39 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன்பு 2014–ம் ஆண்டு இதே பெர்லினில் நடந்த போட்டியில் கென்யாவின் டென்னிஸ் கிமெட்டோ 2 மணி 2 நிமிடம் 57 வினாடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது. அதை 33 வயதான கிப்சோஜ் முறியடித்துள்ளார். ‘சாதனைக்குரிய இந்த நாளை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. உலக சாதனை நிகழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கிப்சோஜ் குறிப்பிட்டார்.


ஆசிரியரின் தேர்வுகள்...