கிரிக்கெட்

இலங்கை-ஆப்கானிஸ்தான் இன்று மோதல் + "||" + Sri Lanka and Afghanistan, Confrontation today

இலங்கை-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இலங்கை-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 3-வது லீக்கில் மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி, அஸ்கார் ஆப்கன் தலைமையிலான ஆப்கானிஸ்தானுடன் (பி பிரிவு) மோதுகிறது.
அபுதாபி, 

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 3-வது லீக்கில் மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி, அஸ்கார் ஆப்கன் தலைமையிலான ஆப்கானிஸ்தானுடன் (பி பிரிவு) மோதுகிறது. தனது தொடக்க லீக்கில் வங்காளதேசத்திடம் உதை வாங்கிய இலங்கை அணி இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கலாம். தோற்றால் வெளியேற வேண்டியது தான்.

ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித்கான், முஜீப் ரகுமான், முகமது நபி ஆகியோர் சுழலில் மிரட்டக்கூடியவர்கள். அதனால் இலங்கை அணிக்கு இந்த ஆட்டமும் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டிலும் இலங்கை அணியே வெற்றி கண்டிருக்கிறது.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...