கரீபியன் லீக் கிரிக்கெட்: டிரின்பாகோ அணி மீண்டும் ‘சாம்பியன்’


கரீபியன் லீக் கிரிக்கெட்: டிரின்பாகோ அணி மீண்டும் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 17 Sep 2018 10:15 PM GMT (Updated: 17 Sep 2018 9:01 PM GMT)

கரீபியன் லீக் கிரிக்கெட் போட்டியில், டிரின்பாகோ அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.

கயானா,

6-வது கரீபியன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்-கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லுக் ரோஞ்சி 44 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் ஹாரி பிர்ரே 3 விக்கெட்டும், வெய்ன் பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக பட்டத்தை வென்று அசத்தி இருக்கிறது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் அதிகபட்சமாக காலின் முன்ரோ 68 ரன்கள் (39 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

Next Story