கிரிக்கெட்

துர்கா பூஜை பற்றிய இசை வீடியோவில் நடனம் ஆடிய சவுரவ் கங்குலி + "||" + Puja music video featuring Sourav Ganguly coming up soon: Raj

துர்கா பூஜை பற்றிய இசை வீடியோவில் நடனம் ஆடிய சவுரவ் கங்குலி

துர்கா பூஜை பற்றிய இசை வீடியோவில் நடனம் ஆடிய சவுரவ் கங்குலி
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி துர்கா பூஜை பற்றிய இசை வீடியோ ஒன்றில் நடனம் ஆடியுள்ளார்.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி.  இவர் வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்.  வங்காள சேனல் ஒன்றில் குவிஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் கங்குலி, பல்வேறு வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இசை வீடியோ ஒன்றில் நடித்துள்ளார்.  ஜெய் ஜெய் துர்கா மா என்ற அந்த வீடியோவில் அவருடன் வங்காள நடிகைகளான சுபோஸ்ரீ கங்குலி மற்றும் மிமி சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.  இந்த இசை வீடியோவை ராஜ் சக்ரவர்த்தி இயக்கி உள்ளார்.  ஜீத் கங்குலி இசை அமைத்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கங்குலி, எதுவும் முதன்முறையில் நன்றாக இருக்கும்.  இந்த இசை வீடியோவில் எனது நடனம் இடம்பெற்றுள்ளது.  நான் அதிர்ஷ்டம் நிறைந்தவன்.  இயக்குனர் ராஜ் கடின நடன அசைவுகளை எனக்கு கொடுக்கவில்லை.  அவை அனைத்தும் சிறந்த நடனம் ஆடும் சுபோஸ்ரீ மற்றும் மிமிக்கு சென்று விட்டது என கூறினார்.

அவரின் படப்பிடிப்பு அனுபவம் பற்றி கூறும்பொழுது, ஒவ்வொரு சீன் எடுத்த பின்பும் அந்த வீடியோ பதிவை நான் திரும்ப கவனிப்பேன்.  ஏனெனில் அதில் முட்டாளாக நான் தெரிய கூடாது.

எனக்கு கிரிக்கெட் மற்றும் கமெண்ட்ரி புரியும்.  சிறிதளவுக்கு வர்த்தக விளம்பரங்கள் பற்றியும் புரியும்.  ஆனால் இசை வீடியோவின் தொழில் நுட்பங்கள் பற்றி, காட்சிகள் எடுப்பது பற்றி எனக்கு புரியவில்லை.  காட்சிகள் எடுத்த பின்னர் இது எனக்கு சிறந்த தருணம் என்று உணர்ந்தேன என கூறினார்.  இந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும்.