கிரிக்கெட்

டோனி டக் அவுட் ஆனதால் கொந்தளித்த இளம் ரசிகர்! சமூக வலைதளத்தில் வைரலாகிறது + "||" + Asia Cup 2018: Young Fan Reacts In Agony After MS Dhoni Departs For A Duck Against Hong Kong. Watch

டோனி டக் அவுட் ஆனதால் கொந்தளித்த இளம் ரசிகர்! சமூக வலைதளத்தில் வைரலாகிறது

டோனி டக் அவுட் ஆனதால் கொந்தளித்த இளம் ரசிகர்! சமூக வலைதளத்தில் வைரலாகிறது
டோனி அவுட் ஆனதை அதிர்ச்சி அடைந்த இளம் ரசிகர், மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்தியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
துபாய், 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தனது முதல் ஆட்டத்தில் நேற்று ஹாங்காங்கை இந்திய அணி எதிர்கொண்டது. கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட ஹாங்காங், இந்திய அணியை மிரட்டியது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் இந்தியாவுக்கு சமபலம் கொடுத்த ஹாங்காங், இறுதியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்த போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் நவீன கிரிக்கெட்டின் மிகப்பெரும் சாம்பியன் வீரராகவும் பார்க்கப்படும் டோனி, மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் எதுவும் இன்றி வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். டோனி அவுட் ஆனதை பார்த்து ஏமாற்றம் அடைந்த சிறுவன் மைதானத்தில் இருந்த இருக்கை மீது தனது ஆத்திரத்தை காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் அணிக்கான உடையுடன் போட்டியை பார்த்து ரசித்த சிறுவன், டோனி களம் இறங்கியதும் மிகுந்த ஆரவாரம் செய்தான். ஆனால் சில நிமிடங்களில் டோனி ஆட்டமிழந்ததால், அதிர்ச்சி அடைந்த சிறுவன், மிகவும் ஆத்திரத்துடன் இருக்கை மீது தலையால் முட்டுவதும், தொடர்ந்து கோபத்தில் குதித்துக்கொண்டபடியும் அங்கும் இங்கும் சுற்றியவாறும் நின்றான். நேரடி ஒளிபரப்பிலும் சிறுவனின் செய்கை ஒளிபரப்பட்டது. தனது செய்கை மைதானத்தில் இருந்த பெரிய திரையில் காண்பிக்கப்படுவதை அறிந்த பிறகே சிறுவன் சற்று சாந்தமானான்.