கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றி + "||" + 20-Over Cricket against Sri Lanka: Indian women's team win

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றி
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றது.
கட்டுநாயகே,

இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கட்டுநாயகேவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனுஜா பட்டீல் தலா 36 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மந்தனா டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 19.3 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளும், ராதா யாதவ், ஹர்மன்பிரீத் கவுர் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி கொழும்பில் நாளை நடக்கிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...