கிரிக்கெட்

ரசிகரிடம் மோசமாக நடந்து கொண்ட வீராட் கோலி + "||" + Feeling badly with the fan Veerat Kohli

ரசிகரிடம் மோசமாக நடந்து கொண்ட வீராட் கோலி

ரசிகரிடம்  மோசமாக நடந்து கொண்ட வீராட் கோலி
இந்திய அணியின் தலைவரான கோலி ரசிகர் ஒருவர் ஆசையாக கொடுத்த புகைப்பட பிரேமை வாங்கி பார்க்காமல் அப்படியே தன்னுடைய செக்யூரிட்டியிடம் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. #viratkohli #indiacricketteam

மூன்று வித போட்டிகளில் விளையாடி வரும் கோலி, தற்போது ஆசியகோப்பை தொடருக்கான போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆசியகோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக , ரோகித் சர்மா உள்ளார்.இந்நிலையில் ஓய்வில் இருக்கும் கோலி, சமீபத்தில் தன்னுடைய மனைவியான அனுஷ்காவுடன் மும்பை விமானநிலையத்தில் வந்து  இறங்கியுள்ளார்.

அப்போது கோலியின் தீவிர இளம் ரசிகர் ஒருவர் அவர் தொடர்பான புகைப்பட பிரேமை அழகாக வடிவமைத்து கொண்டு வந்து அவரிடம் கொடுத்துள்ளார்.ஆனால் கோலியோ ரசிகர் அப்படி என்ன தான் கொடுத்திருக்கிறார் என்று அதை சற்றும் பார்க்காமல், உடனடியாக தன்னுடைய செக்ரியூட்டியிடம் கொடுத்தாக கூறப்படுகிறது. இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் அது என்ன என்றாவது கோலி பார்த்திருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த ரசிகரும் கோலி எந்த ஒரு பதிலும் சொல்லவில்லையே என்ற ஏமாற்றத்தில் திரும்பியிருப்பார் என்றும் கூறி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் - ஊழல் பிரிவு பொது மேலாளர்
சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பொது ஊழல் பிரிவு பொது மேலாளர் அலெக்ஸ் மார்சல் கூறி உள்ளார்.
2. ’பொய்களுடன் நீண்ட நாள் வாழ முடியாது’சூதாட்டப் புகாரை ஒப்புகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
தன்மீது சுமத்தப்பட்ட சூதாட்டப் புகாரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா ஒப்புக்கொண்டுள்ளார்.
3. தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி ; இன்னும் முடிவு எடுக்கவில்லை - பிசிசிஐ
தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி இன்னும் முடிவு எடுக்கவில்லை என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.
4. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
5. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்
ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.