கிரிக்கெட்

ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகல் + "||" + injured Hardik Pandya ruled out of Asia Cup

ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகல்

ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகல்
ஆசிய கோப்பை தொடரில் இருந்து காயத்தால் அவதிப்படும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நீக்கப்பட்டுள்ளார்.
துபாய், 

பாகிஸ்ஹானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் அடைந்தார். பந்து வீசும் போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தர். 

மருத்துவக்குழு அவரை பரிசோதித்த பிறகு ஸ்டிரெச்சரில் தூக்கி கொண்டு செல்லப்பட்டார். முதுகு வலியால் கடுமையாக அவதிப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, முதற்கட்ட சிகிச்சைக்கு பிறகு எழுந்து நிற்கும் அளவுக்கு உடல் நலம் பெற்றதாக பிசிசிஐ தெரிவித்தது. 

இந்த நிலையில், காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக தீபக் சஹார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.