கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? + "||" + Another debut after 10 years, can't wait!-Virat Kohli ‏

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அனுஷ்காவும் விராட் கோலியும் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளனர். இருவரும் இணைந்தும் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் அனுஷ்காவைத் தொடர்ந்து விராட் கோலியும் சினிமாவுக்கு வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆக்ரோஷமான ஆக்ஷன் மூடில் விராட் கோலி சூப்பர் ஹீரோவாக வருவதுபோலவும் பின்னணியில் கார்கள் மோதி நிற்பது போலவும் உள்ளன. போஸ்டருக்கு கீழே, பத்து வருடத்துக்குப் பிறகு இன்னொரு அறிமுகம். காத்திருக்க முடியவில்லை. என்று குறிப்பிட்டிருக்கிறார் விராட் கோலி.

விராட் கோலி அறிமுகம்  என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த போஸ்டரில் டிரைலர்  என்று டைட்டில் வைத்துள்ளனர். கீழே கேப்ஷனாக, தி மூவி என்று குறிப்பிட்டுள்ளனர். வரும் 28 ஆம் தேதி இது வெளியாகிறது எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் இது திரைப்படம் பற்றிய அறிவிப்பாக இருக்குமா அல்லது விளம்பரத்துக்கான போஸ்டரா என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர். இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரிக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.
2. அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? : ஸ்ரீசாந்த் குமுறல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம் அடித்து உள்ளார்.
4. அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் கவுதம் கம்பீர் ஓய்வு; அரசியலில் இன்னிங்சை தொடங்குகிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
5. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் ஒரே திசையில் அடித்த இளம் வீரர்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை ஒரே திசையில் விளாசி அசத்தியுள்ளார்.