கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை: தமிழகம், மும்பை அணிகள் வெற்றி + "||" + Vijay Hazare Trophy: Tamilnadu and Mumbai teams win

விஜய் ஹசாரே கோப்பை: தமிழகம், மும்பை அணிகள் வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை: தமிழகம், மும்பை அணிகள் வெற்றி
விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தமிழகம், மும்பை அணிகள் வெற்றிபெற்றன.


விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் (ஏ பிரிவு) நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் மும்பை- கர்நாடகா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது கேப்டன் ரஹானே 148 ரன்களும் (13 பவுண்டரி, 3 சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 110 ரன்களும் (5 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசினர். தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி 45 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சென்னையில் நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு-சர்வீசஸ் (சி பிரிவு) அணிகள் சந்தித்தன. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 133 ரன்களும் (130 பந்து, 17 பவுண்டரி), அபினவ் முகுந்த் 69 ரன்களும், பாபா இந்திரஜித் 76 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய சர்வீசஸ் அணி 46 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதன் மூலம் தமிழக அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவதி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்புடைய செய்திகள்

1. மேகதாது அணை: கர்நாடகாவுக்கு அளித்துள்ள அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அளித்துள்ள அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
2. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம் - கேரளா அரசு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம் என கேரளா அரசு தெரிவித்துள்ளது.
4. புயல் சேதத்தை சீரமைக்க தமிழகம், புதுவைக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்கவேண்டும் - ஆர்.நல்லக்கண்ணு பேட்டி
புயல் சேதத்தை சீரமைக்க தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்தார்.
5. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜனதாவை வெற்றி பெற செய்வோம் - அர்ஜுன் சம்பத் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் பா.ஜனதாவை 20 தொகுதிகளில் வெற்றி பெற செய்வோம் என அர்ஜுன் சம்பத் கூறினார்.