கிரிக்கெட்

இந்திய தேசிய கீதத்தை மனமுறுக பாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் + "||" + India vs Pakistan Asia Cup: Video of Pakistani cricket fan singing Indian National Anthem takes social media by storm

இந்திய தேசிய கீதத்தை மனமுறுக பாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்

இந்திய தேசிய கீதத்தை மனமுறுக பாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த 19ந் தேதி மோதின. இந்த போட்டியில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் மனமுறுக பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
துபாய், 

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த 19ந் தேதி மோதின. இதனால் மைதானம் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனிடையே போட்டி துவங்கும் முன்னர் இரு அணி வீரர்களும் தங்களது நாட்டு தேசிய கீதங்களை பாடுவது வழக்கம். அப்போது இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது, மைதானத்திலிருந்த பாகிஸ்தான் வீரர் மிகவும் உருக்கமாகவும், சத்தமாகவும் பாடினார். இதனை அவரே வீடியோவும் எடுத்து கொண்டார்.

கழுத்தில் பாகிஸ்தான் கொடியை அணிந்து மிகவும் உருக்கமாக இந்திய தேசிய கீதம் பாடிய அந்த ரசிகரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த வீடியோவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.