கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா + "||" + Asia Cup Cricket: Pakistan defeat India

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.


இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் இன்று அரங்கேறும் முக்கியமான ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதியது.
 
சூப்பர்-4 சுற்றின் முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை பந்தாடிய இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால் கிட்டத்தட்ட இறுதிப்போட்டியை உறுதி செய்து விட முடியும். நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானை லீக் சுற்றில் 162 ரன்களில் சுருட்டி மெகா வெற்றியை பெற்றது.

இந்தநிலையில்,  சூப்பர்-4 சுற்றில் துபாயில் இன்று அரங்கேறும் முக்கியமான ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி  கேப்டன் சர்ப்பராஸ்  பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார், பும்ரா பந்து வீச்சை தொடங்கினார்கள்.  புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எதிர்கொள்ள திணறினார்கள்.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் உல் ஹக் (10), பகர் (31) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  அவர்களை தொடர்ந்து அசாம் (9), சர்ப்ராஸ் அகமது (44), சோயீப் மாலிக் (78), ஆசிப் அலி (30) மற்றும் சதாப் கான் (10) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஹசன் அலி (2), முகமது நவாஸ் (15) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  போட்டியின் இறுதியில் 50 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை எடுத்துள்ளது.  இதனால் இந்திய அணி வெற்றி பெற 238 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த போட்டியில் ஆசிப் அலியை வெளியேற்றிய சகால் ஒரு நாள் அரங்கில் 50வது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், இந்த இலக்கை அதிவேகமாக (30 போட்டி) எட்டிய 5வது இந்திய பவுலரானார். முதலிடத்தில் அகார்கர் (23 போட்டி) உள்ளார்.

இதனையடுத்து  238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 100 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.  ரோகித் ஷர்மா  111 (119) ரன்களுடன், அம்பத்தி ராயுடு 12 (18) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஆட்ட முடிவில்  39.3 ஓவர்களில்  238 ரன்கள் எடுத்து  9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்கத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானின் உயர் ஆணையக் குழு
வங்காள தேசத்தில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த பிரமோஸ் ஏவுகணை என்ஜீனியரை உ.பி. ஏடிஎஸ் 3 நாள் காவலில் எடுத்தது
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த பிரமோஸ் ஏவுகணை எனஜீனியரை உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் காவலில் எடுத்தது.
3. பாகிஸ்தானுக்கு உயர் ரக ராணுவ உளவு விமானங்களை விற்பனை செய்ய சீனா முடிவு
பாகிஸ்தானுக்கு உயர் ரக ராணுவ உளவு விமானங்கள் விற்பனை செய்ய சீனா முடிவு செய்துள்ளது.
4. ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கிரிக்கெட் வீரருக்கு 4 மாதம் தடை
ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் வீரர் அகமது செஷாத் 4 மாத காலம் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
5. ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடக்கம்
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது.