கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: வங்காளதேச அணி 249 ரன்கள் குவிப்பு + "||" + Against Afghanistan Bangladeshi team 249 runs scored

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: வங்காளதேச அணி 249 ரன்கள் குவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: வங்காளதேச அணி 249 ரன்கள் குவிப்பு
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது.
அபுதாபி,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டம் ஒன்றில் வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் சந்தித்தன.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியின் தொடக்க விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் நஸ்முல் ஹூசைன் ஷான்டோ 6 ரன்னிலும், முகமத் மிதுன் 1 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் லிட்டான் தாஸ் 41 ரன்னிலும் (43 பந்துகளில் 3 பவுண்டரியுடன்), ஷகிப் அல்-ஹசன் ரன் எதுவும் எடுக்காமலும், முஷ்பிகுர் ரஹிம் 33 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் வங்காளதேச அணி 20.5 ஓவர்களில் 87 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தொடக்கம் கண்டது.


6-வது விக்கெட்டுக்கு மக்முதுல்லா, இம்ருல் கேயஸ்சுடன் கூட்டணி அமைத்தார். இந்த ஜோடி பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது. அணியின் ஸ்கோர் 46.2 ஓவர்களில் 215 ரன்னை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. அடித்து ஆடிய மக்முதுல்லா (74 ரன்கள், 81 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) அப்தாப் ஆலம் பந்து வீச்சில் ரஷித்கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு இம்ருல் கேயஸ், மக்முதுல்லா இணை 128 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களம் கண்ட கேப்டன் மோர்தசா 9 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன் எடுத்த நிலையில் அப்தாப் ஆலம் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முகமது ஷாசாத்திடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். நிர்ணயிக்கப்பட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. இம்ருல் கேயஸ் 89 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 72 ரன்னும், மெஹிதி ஹசன் மிராஸ் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அப்தாப் ஆலம் 3 விக்கெட்டும், முஜீப் ரகுமான், ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து இருந்தது. இசானுல்லா 8 ரன்னிலும், ரஹ்மத் ஷா 1 ரன்னிலும், முகமது ஷாசாத் 53 ரன்னிலும், கேப்டன் அஷ்கர் ஆப்கன் 39 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஹஷ்மத்துல்லா ஷஹிதி 69 ரன்னுடனும், முகமது நபி 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...