கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி + "||" + Vijay Hazare Cup Cricket: The Tamil Nadu team failed

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

சென்னை, 

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு–ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் இ‌ஷன் கிஷான் 85 ரன்கள் சேர்த்தார். தமிழக அணி தரப்பில் வருண்சக்ரவர்த்தி 3 விக்கெட்டும், நடராஜன், முகமது தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய தமிழக அணி 49.5 ஓவர்களில் 299 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆகி 8 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. கேப்டன் பாபா இந்திரஜித்தின் (101 ரன்கள்) சதம் வீணானது. 4–வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி சந்தித்த 2–வது தோல்வி இதுவாகும்.தொடர்புடைய செய்திகள்

1. ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை: இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, தவான் முன்னேற்றம் ஆல்–ரவுண்டரில் ரஷித்கான் முதலிடம்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வீரர்களின் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
2. ஒரு நாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை சுருட்டியது தென்ஆப்பிரிக்கா
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: பெங்காலை வீழ்த்தி தமிழக அணி 4–வது வெற்றி
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. ஆசிய கோப்பை கிரிக்கெட் வெற்றி: கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரவிசாஸ்திரி புகழாரம்
துபாயில் நேற்று முன்தினம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
5. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களம் இறங்குகிறது.