கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை அணியில் இருந்து மேத்யூஸ் நீக்கம் + "||" + One Day Against England: From Sri Lanka Removal of Matthews

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை அணியில் இருந்து மேத்யூஸ் நீக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை அணியில் இருந்து மேத்யூஸ் நீக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி லீக் சுற்றில் 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு முதல் சுற்றுடன் வெளியேறியது.

கொழும்பு, 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி லீக் சுற்றில் 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு முதல் சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்வியை தொடர்ந்து இலங்கை அணியின் கேப்டன் பதவியில் இருந்து மேத்யூஸ் நேற்று முன்தினம் நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் வருகிற 10–ந் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடருக்கான இலங்கை அணியில் இருந்தும் நேற்று மேத்யூஸ் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். உடல் தகுதியை காரணம் காட்டி அவர் கழற்றி விடப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இலங்கை அணி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் அனுமதிக்காக இலங்கை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பட்டியலில் மேத்யூஸ் பெயர் இடம் பெறவில்லை.


ஆசிரியரின் தேர்வுகள்...