இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்திலும் இந்திய பெண்கள் அணி வெற்றி


இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்திலும் இந்திய பெண்கள் அணி வெற்றி
x
தினத்தந்தி 25 Sep 2018 9:00 PM GMT (Updated: 25 Sep 2018 8:20 PM GMT)

இந்தியா – இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கட்டுநாயகேவில் நேற்று நடந்தது.

கட்டுநாயகே, 

இந்தியா – இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கட்டுநாயகேவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 18.3 ஓவர்களில் 156 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 63 ரன்களும் (38 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 46 ரன்களும் (31 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர். மந்தனா (0), மிதாலிராஜ் (12 ரன்) ஏமாற்றம் அளித்தனர். தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் 105 ரன்னில் சுருண்டது. பூனம் யாதவ் 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ், தீப்தி ‌ஷர்மா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 4–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது.


Next Story