கிரிக்கெட்

பாகிஸ்தான் வீரர்களின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி புதிய திட்டம் + "||" + Pakistani players To deal with the spinning wheel The Australian team is a new project

பாகிஸ்தான் வீரர்களின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி புதிய திட்டம்

பாகிஸ்தான் வீரர்களின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி புதிய திட்டம்
பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணி 0–2 என்ற கணக்கில் தோல்வி கண்டது.

மெல்போர்ன், 

கடந்த 2014–ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணி 0–2 என்ற கணக்கில் தோல்வி கண்டது. அந்த போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியினரின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் விரைவில் விக்கெட்டை இழந்ததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அடுத்த மாதத்தில் (அக்டோபர்) ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி துபாயில் வருகிற 7–ந் தேதி தொடங்குகிறது.

இந்த முறை பாகிஸ்தான் அணியினரின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் புதிய திட்டத்தை வகுத்து இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் ஆல்–ரவுண்டர் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அத்துடன் மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தும் சுழற்பந்து வீச்சாளர்களான இந்தியாவை சேர்ந்த பர்தீப் சாகு (அரியானா), ஜியாஸ் (கேரளா) ஆகியோரை கொண்டு வலைப்பயிற்சியில் ஈடுபட ஆஸ்திரேலிய அணியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ள முடியும் என்று அந்த அணி நம்புகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் பலி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் பலியானார்.
2. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப், அபூர்வ நோயால் பாதிப்பு : ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
3. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் பலி, 3 பேர் படுகாயம்
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.
4. பாகிஸ்தான் செய்ய வேண்டியதை நாங்கள் செய்தோம் - நிர்மலா சீதாராமன்
பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் செய்திருக்க வேண்டியதை நாங்கள் செய்தோம் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman
5. ராணுவ தொப்பி அணிந்து ஆடிய இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐ.சி.சி.க்கு, பாகிஸ்தான் மந்திரிகள் வலியுறுத்தல்
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் புலவாமா மாவட்டத்தில் நடத்திய கொடூரமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர்.