கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா ராஜினாமா + "||" + West Indies coach Stuart Law resigns

வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா ராஜினாமா

வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா ராஜினாமா
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா (ஆஸ்திரேலியா) அந்த பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய மற்றும் வங்காளதேச பயணத்துடன் அவரது பயிற்சி காலம் நிறைவு பெறுகிறது. இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் கவுண்டி அணியின் பயிற்சியாளராக 4 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ள ஸ்டூவர்ட் லா ஜனவரி மாதத்தில் இருந்து அந்த அணியை கவனிக்க இருக்க

கிங்ஸ்டன், 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா (ஆஸ்திரேலியா) அந்த பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய மற்றும் வங்காளதேச பயணத்துடன் அவரது பயிற்சி காலம் நிறைவு பெறுகிறது. இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் கவுண்டி அணியின் பயிற்சியாளராக 4 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ள ஸ்டூவர்ட் லா ஜனவரி மாதத்தில் இருந்து அந்த அணியை கவனிக்க இருக்கிறார்.

49 வயதான ஸ்டூவர்ட் லா கூறுகையில், ‘வெஸ்ட் இண்டீஸ் அணி உடனான எனது பயிற்சி காலத்தை உற்சாகமாக அனுபவித்தேன். விலகல் முடிவு கடினமான ஒன்று. அதே சமயம் மிடில்செக்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவி, எனக்கு கிடைத்த கவுரவமாகும்’ என்றார்.

ஸ்டூவர்ட் லாவின் பயிற்சியின் கீழ் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 டெஸ்டுகளில் விளையாடி 5–ல் வெற்றி கண்டது. கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் போக்கால் ஒதுங்கி இருந்த கிறிஸ் கெய்ல், பொல்லார்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களை மீண்டும் அணிக்கு அழைத்து வந்ததில் ஸ்டூவர்ட் லா முக்கிய பங்காற்றினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பர்பானியில் தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்கள் 13 பேர் திடீர் ராஜினாமா கட்சி எம்.எல்.ஏ.வின் செயல்பாட்டால் அதிருப்தி
தங்களது கட்சி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த பர்பானி மாநகராட்சியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்கள் 13 பேர் திடீரென ராஜினாமா செய்தனர்.
2. சட்டசபை தேர்தலில் வெற்றி: 5 எம்.பி.க்கள் ராஜினாமா
மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களான மனோகர் உந்த்வால் மற்றும் நரேந்திர சிங் ஆகிய இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.