கிரிக்கெட்

ரிவியூவை வீணாக்கிய கே.எல்.ராகுலை டுவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் + "||" + Asia Cup 2018: KL Rahul Regrets Unsuccessful Review, Twitter Shows No Mercy

ரிவியூவை வீணாக்கிய கே.எல்.ராகுலை டுவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ரிவியூவை வீணாக்கிய  கே.எல்.ராகுலை டுவிட்டரில்  வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் கே.எல்.ராகுல் ரிவியூவை வீணாக்கினார்.
அபுதாபி,

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற  சூப்பர்-4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் மோதின. கத்துக்குட்டி அணியாக கருதப்படும் ஆப்கானிஸ்தான், நடப்பு ஆசிய லீக் தொடரில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை மிரட்டிய ஆப்கானிஸ்தான் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. 

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி  50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்தது. 253 ரன்களை நோக்கி விளையாடிய  இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரை வார்த்தது. கடைசி கட்டத்தில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் சரிசமமாக ரன்களை சேர்த்ததால், போட்டி டிரா ஆனது. இந்தப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது போக, அந்த அணிக்கு அதிருஷ்டமும் கை கொடுத்தது. 

இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட நட்சத்திர வீரர் டோனி எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதேபோல், மற்றொரு அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கும் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். ஆனால், ரீப்ளேயில், இருவருக்கும், பந்து ஸ்டம்பை விட்டு விலகிச்சென்றது நன்றாக தெரிந்தது. ஏற்கனவே, துவக்க வீரர் கே.ல் ராகுல் , இந்திய அணிக்கு வழங்கப்பட்டு இருந்த ரிவியூவை (நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் முறை) வீணடித்து விட்டார்.  கே.எல். ராகுல் கள நடுவர் அவுட் கொடுத்ததை எதிர்த்து ரிவியூ கேட்டார். ஆனால், ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை பதம் பார்க்கும் என கணிக்கப்பட்டதால், ராகுலுக்கு அவுட் உறுதி செய்யப்பட்டது. 

ஐசிசியின் விதிப்படி, ஒரு அணிக்கு பேட் செய்யும் போது ஒரு முறை பவுலிங் செய்யும் போது ஒரு முறை மட்டுமே ரிவியூ கேட்க அனுமதி உண்டு. கேட்கும் ரிவியூ வெற்றிகரமாக அமைந்தால், ரிவியூ நீடிக்கும். ஆனால், தோல்வி அடைந்தால், ரிவியூ அதற்கு மேல் கேட்க முடியாது. கே.எல்.ராகுல் ஒரே ஒரு ரிவியூவையும் வீணடித்து விட்டதால், டோனி, தினேஷ் கார்த்திக், நடுவரின் முடிவை எதிர்க்க முடியாமல் சோகத்துடன் பெவிலியன் திரும்பினர். இவ்விரு விக்கெட்டுகளும் இந்தியாவின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் பேசிய கே.எல். ராகுல், தான் ரிவியூ கேட்டது தவறு எனவும், ரிவியூவை வீணடித்து விட்டதாகவும் வருத்தப்பட்டார்.  கே.எல். ராகுல் வருத்தம் தெரிவித்த பின்னரும், நெட்டிசன்கள் கே.எல்.ராகுலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...