கிரிக்கெட்

’பந்துவீசுப்பா இல்லையென்றால் பவுலரை மாத்திடுவேன்’குல்தீபை கலாய்த்த டோனி + "||" + Watch: MS Dhoni shows Kuldeep Yadav who is the boss after field change argument

’பந்துவீசுப்பா இல்லையென்றால் பவுலரை மாத்திடுவேன்’குல்தீபை கலாய்த்த டோனி

’பந்துவீசுப்பா இல்லையென்றால் பவுலரை மாத்திடுவேன்’குல்தீபை கலாய்த்த டோனி
ஆசிய கோப்பை நேற்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய கேப்டன் டோனி பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை கலாய்த்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.
துபாய்

ஆசிய கோப்பை போட்டியில்  நேற்று நடந்த போட்டியில்  இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக  டோனி நியமிக்கப்பட்டார். ஆனால், நேற்றைய போட்டி எந்த அணிக்கும் வெற்றி, தோல்வியின்றி ‘டை’யில் முடிந்தது.


முன்னதாக, இந்திய அணி பந்துவீச்சில் ஈடுபட்டிருந்தபோது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினர். குறிப்பாக, குல்தீப் யாதவ் 38 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் பந்துவீசும் போது, அணித்தலைவர் டோனி பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் பீல்டர்களை நிற்க வைத்தார்.

ஆனால், குல்தீப் தனக்கு இந்த இடத்தில் தான் பீல்டர் வேண்டும் என மாற்றிக் கொண்டே இருந்தார். அப்போது டோனி, ‘Bowling karega ya bowler change karein' என ஹிந்தியில் கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அதாவது, ‘பந்துவீசுப்பா இல்லையென்றால் பவுலரை மாத்திடுவேன்’ என்பது டோனி கூறியதற்கு அர்த்தம் ஆகும். இந்த ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஆசிரியரின் தேர்வுகள்...