கிரிக்கெட்

ஒருநாள் போட்டியில் சீராக வாய்ப்பளிக்காதது வெறுப்பாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது கே.எல்.ராகுல் அதிருப்தி + "||" + KL Rahul on his ODI career: Frustrating at times but can’t sulk

ஒருநாள் போட்டியில் சீராக வாய்ப்பளிக்காதது வெறுப்பாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது கே.எல்.ராகுல் அதிருப்தி

ஒருநாள் போட்டியில்  சீராக வாய்ப்பளிக்காதது வெறுப்பாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது கே.எல்.ராகுல் அதிருப்தி
ஒருநாள் அணியில் சீராக வாய்ப்பளிக்காதது ‘சில வேளைகளில் வெறுப்பாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது’ என்று கே.எல்.ராகுல் மனம் திறந்துள்ளார்.
துபாய்,

கே.எல்.ராகுல் கூறியதாவது;

 அணி நிர்வாகம் என்னுடன் அமர்ந்து என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று விளக்கினர். இது எனக்கு என்னைத் தயார்படுத்திக் கொள்ளவும் எந்தப் பாதையை நோக்கி நான் செல்கிறேன் என்பதற்கும் உதவுகிறது.

எனக்கு வாய்ப்பளிக்காத காலக்கட்டத்தை என் திறமையையும் உடற்தகுதியையும் வளர்த்துக் கொள்ள நேரத்தைச் செலவிடுகிறேன். கிரிக்கெட் ஆடும் நாட்களை விட  நாங்கள் தெருவில் இருக்கும் நாட்கள் மிக அதிகம் எனவே உடற்தகுதி முக்கியமானது.

பல்வேறு நிலைகளில் இறங்கி ஆடுவது சவால்தான். நான் பொதுவாக எனது சிறுபிராயம் முதலே டாப் ஆர்டரில் இறங்கியே பழக்கப்பட்டவன், அதுதான் எனக்கு சவுகரியமானது. ஆனால் அணிக்காக கொஞ்சம் நாம் விட்டுக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் நான் சோபிக்க முடியவில்லை. ஆனால் நானும் அதற்காக உழைத்துத்தான் வருகிறேன்.

ஆசிரியரின் தேர்வுகள்...