கிரிக்கெட்

எதுவும் நடக்கலாம்–மோர்தசா + "||" + Anything is possible-mortaca

எதுவும் நடக்கலாம்–மோர்தசா

எதுவும் நடக்கலாம்–மோர்தசா
வங்காளதேச அணியின் கேப்டன் மோர்தசா கூறுகையில், ‘உலகின் முன்னணி அணியாக இந்தியா விளங்குகிறது.

துபாய், 

வங்காளதேச அணியின் கேப்டன் மோர்தசா கூறுகையில், ‘உலகின் முன்னணி அணியாக இந்தியா விளங்குகிறது. இந்த போட்டிக்கு வரும் போதே அவர்களுக்கு தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால் யாருக்கு தெரியும்? இங்கு எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். எனவே நாங்கள் மனரீதியாக வலுவுடன் கடைசி பந்து வரை போராட வேண்டியது முக்கியமாகும். இந்தியாவின் பேட்டிங் வரிசையை பார்க்கும் போது, முதலில் பேட் செய்தால் குறைந்தது 260–270 ரன்கள் எடுத்தால் தான் சவாலான ஸ்கோராக இருக்கும்’ என்றார்.

மேலும் மோர்தசா, ‘எங்களது தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவையும் பொருட்படுத்தாமல் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி விக்கெட்டுக்கு இறங்கி முஷ்பிகுர் ரஹிம் ரன் குவிக்க உதவிய அந்த உணர்ச்சிமயமான தருணத்திலேயே எனது ஆசிய கோப்பையை வென்று விட்டேன்’ என்றும் குறிப்பிட்டார்.