கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இஷாந்த் ‌ஷர்மா, அஸ்வினுக்கு உடல் தகுதி சோதனை + "||" + Test cricket against West Indies: Ishant Sharma, Ashwin's body test

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இஷாந்த் ‌ஷர்மா, அஸ்வினுக்கு உடல் தகுதி சோதனை

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இஷாந்த் ‌ஷர்மா, அஸ்வினுக்கு உடல் தகுதி சோதனை
இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஆகியோருக்கு பெங்களூருவில் நாளை உடல் தகுதி சோதனை நடத்தப்படுகிறது.

புதுடெல்லி, 

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஆகியோருக்கு பெங்களூருவில் நாளை உடல் தகுதி சோதனை நடத்தப்படுகிறது.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் வருகிற 4–ந் தேதியும், 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் வருகிற 12–ந் தேதியும் தொடங்குகிறது.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அவருடன் தேர்வாளர் தேவங் காந்தி மட்டுமே கலந்து கொண்டார். மற்ற தேர்வாளர்களான சந்தீப் சிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை காணவும், ஜதின் பரன்ஜே, ககன் கோடா ஆகியோர் விஜய் ஹசாரே கோப்பை போட்டியை பார்க்கவும் சென்றுள்ளதால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் தேர்வு குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இஷாந்த், அஸ்வினுக்கு உடல்தகுதி சோதனை

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரின் போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஆகியோருக்கு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு உடல் தகுதி சோதனை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி இருவருக்கும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நாளை (சனிக்கிழமை) உடல் தகுதி சோதனை நடைபெறுகிறது. உடல் தகுதி நிபுணர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே இருவரும் அணிக்கு தேர்வு செய்யப்படுவது உறுதியாகும்.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய சென்று விளையாட இருக்கிறது. எனவே ஆஸ்திரேலிய தொடரையும் மனதில் கொண்டு இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா வந்து சேர்ந்தது.


ஆசிரியரின் தேர்வுகள்...