கிரிக்கெட்

50 ஓவர் ஒருநாள் போட்டியில் 257 ரன்கள் குவித்து சாதனை + "||" + In 50 over ODI match 257 runs scored

50 ஓவர் ஒருநாள் போட்டியில் 257 ரன்கள் குவித்து சாதனை

50 ஓவர் ஒருநாள் போட்டியில் 257 ரன்கள் குவித்து சாதனை
ஆஸ்திரேலியாவின் டி ஆர்கி ஷார்ட், உள்ளூர் ஒருநாள் போட்டியில் 257 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியா- குயின்ஸ்லாந்து அணிகள் மோதின.

முதலில் ஆடிய மேற்கு ஆஸ்திரேலியா அணி 47 ஓவர்களில் 387 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் 3-வது வீரராக களம் இறங்கிய டி ஆர்கி ஷார்ட், எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

ஆர்கி ஷார்ட் 148 பந்துகளில் 15 பவுண்டரிகள், 23 சிக்ஸர்களுடன் 257 ரன்கள்  குவித்தார். இதன்மூலம், 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அத்துடன் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். பின்னர் களம் இறங்கிய குயின்ஸ்லாந்து அணி 42.3 ஓவர்களில் 271 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் சாம் ஹெசிலெட் 107 ரன்ககள் எடுத்தார். இதன்மூலம், மேற்கு ஆஸ்திரேலியா 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரிக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.
2. அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? : ஸ்ரீசாந்த் குமுறல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம் அடித்து உள்ளார்.
4. அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் கவுதம் கம்பீர் ஓய்வு; அரசியலில் இன்னிங்சை தொடங்குகிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
5. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் ஒரே திசையில் அடித்த இளம் வீரர்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை ஒரே திசையில் விளாசி அசத்தியுள்ளார்.