கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு + "||" + 20 Over World Cup Cricket: Indian women's team announcement

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களம் இறங்குகிறது.

புதுடெல்லி, 

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களம் இறங்குகிறது.

பெண்கள் உலக கோப்பை

10 அணிகள் பங்கேற்கும் 6–வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நவம்பர் 9–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் இந்தியா, மூன்று முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன.

தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை கயானாவில் (நவ.9) சந்திக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் தொடருகிறார். ஐ.சி.சி. போட்டி தொடருக்கு அவர் கேப்டனாக பணியாற்ற இருப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கை 20 ஓவர் தொடரில் 4 ஆட்டத்தில் ஆடி வெறும் 11 ரன் மட்டுமே எடுத்த மந்தனாவுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காயத்தால் இலங்கை தொடரில் ஆடாத ஆல்–ரவுண்டர் பூஜா வஸ்ட்ராகர் அணிக்கு திரும்புகிறார். அதே சமயம் அனுபவம் வாய்ந்த ஆல்–ரவுண்டர் ஷிகா பாண்டே நீக்கப்பட்டார்.

அணி விவரம்

இந்திய பெண்கள் அணி வருமாறு:– ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), மிதாலிராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி ‌ஷர்மா, தன்யா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், அனுஜா பட்டீல், எக்தா பிஷ்ட், ஹேமலதா, மன்சி ஜோஷி, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி.தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை சாய்த்து தமிழக அணி முதல் வெற்றி
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி, கேரளாவை சாய்த்து இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.
2. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கம்பீர் சதம் அடித்தார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வீரர் கம்பீர் சதம் அடித்தார்.
3. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 268 ரன்னில் ‘ஆல்–அவுட்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 249 ரன்கள் சேர்ப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
5. தேசிய அணியில் இடம் பெறாத போது டோனி, தவான் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடாதது ஏன்? கவாஸ்கர் அதிரடி கேள்வி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–