வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்திய லெவன் அணி 360 ரன்கள் குவிப்பு


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்திய லெவன் அணி 360 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 29 Sep 2018 9:15 PM GMT (Updated: 29 Sep 2018 9:04 PM GMT)

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

வதோதரா, 

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 4–ந்தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி, கருண் நாயர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் வதோதராவில் நேற்று தொடங்கியது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி 90 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 360 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 6–வது வரிசையில் களம் கண்ட அங்கித் பாவ்னே 116 ரன்கள் (191 பந்து, 15 பவுண்டரி) சேர்த்து அவுட் ஆகாமல் இருந்தார். மயங்க் அகர்வால் 90 ரன்களில் கேட்ச் ஆனார். பிரித்வி ஷா (8 ரன்), ஹனுமா விஹாரி (3 ரன்) ஏமாற்றம் அளித்தனர். 2–வது நாளான இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்யும்.


Next Story