கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் வெற்றி: கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரவிசாஸ்திரி புகழாரம் + "||" + Asian Cup win: Capt. Rohit Sharma Ravicastiri Praise

ஆசிய கோப்பை கிரிக்கெட் வெற்றி: கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரவிசாஸ்திரி புகழாரம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் வெற்றி: கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரவிசாஸ்திரி புகழாரம்
துபாயில் நேற்று முன்தினம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

துபாய், 

துபாயில் நேற்று முன்தினம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இந்த போட்டி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை வெகுவாக பாராட்டினார். இது குறித்து ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ரோகித் சர்மா மிகவும் அமைதியாக செயல்பட்டு கேப்டன் பொறுப்பில் தனது தனித்துவத்தை நிரூபித்தார். வங்காளதேச அணி அதிரடி தொடக்கம் கண்ட போதிலும் அவர் பதற்றமின்றி பொறுமையாக செயல்பட்டார். கேப்டன் பொறுப்பில் அவர் எல்லா வகையிலும் அமைதியாக செயல்பட்டு சாதித்தார். அவர் இறுதிப்போட்டியில் பந்து வீச்சாளர்களை மாற்றி, மாற்றி பயன்படுத்திய விதம் மிகவும் நன்றாக இருந்தது. கடைசி 30 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததை புத்திசாலித்தனமாக கருதுகிறேன். இரண்டரை மாத காலம் இங்கிலாந்து தொடரில் ஆடிவிட்டு உடனடியாக ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்றதால் நமது அணி களைப்பில் மந்தமாக செயல்படும் என்று நினைத்தார்கள். ஹாங்காங்குக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் மட்டும் அதுபோல் தான் ஆடினார்கள். அதன் பிறகு இந்த போட்டி தொடர் முழுவதும் இந்திய அணியினரின் சிறந்த உத்வேகத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த தொடரில் பீல்டிங் நமக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இக்கட்டான சூழ்நிலையிலும் ஒவ்வொரு போட்டியிலும் நமது வீரர்கள் 30 முதல் 35 ரன்கள் வரை கட்டுப்படுத்தினார்கள். மிடில் ஓவர்களில் நாம் தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்த்தியது நல்ல அறிகுறியாகும். கடினமான சூழ்நிலையிலும் புதிய பந்தில் நாம் நன்றாகவே பந்து வீசினோம். சுழற்பந்து வீச்சாளர்களும் நன்றாக இணைந்து செயல்பட்டார்கள். இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடரில் நாம் நன்றாக விளையாடினோம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த தொடரின் முடிவு (1–4) நமக்கு வெற்றிகரமாக அமையவில்லை. அது வேறு வடிவிலான ஆட்டமாகும். இது வேறு வடிவிலான போட்டியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம் கம்பீர் சதம் அடித்தார்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது. மூத்த வீரர் கம்பீர் சதம் விளாசினார்.
2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை–பீகார் அணிகள் கால்இறுதியில் இன்று மோதல்
விஜய்ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
3. பேட் செய்யாமலேயே இரண்டு ‘டிக்ளேர்’ நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ருசிகரம்
நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ்–கேன்டர்பரி அணிகள் மோதின.
4. ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் வெற்றி
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
5. ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை: இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, தவான் முன்னேற்றம் ஆல்–ரவுண்டரில் ரஷித்கான் முதலிடம்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வீரர்களின் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.