கிரிக்கெட்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி: இந்தூரில் இருந்து பரோடாவுக்கு மாற்றம்? + "||" + India-West Indies crash for 2nd ODI: Transition from Indore to Baroda?

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி: இந்தூரில் இருந்து பரோடாவுக்கு மாற்றம்?

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி:  இந்தூரில் இருந்து பரோடாவுக்கு மாற்றம்?
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இந்தூரில் இருந்து பரோடாவுக்கு மாற்றம் செய்யப்படுமா என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தூர்,

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 2-வது ஒரு நாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் வருகிற 24-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டி அங்கு நடப்பதில் தற்போது சிக்கல் உருவாகியுள்ளது.


இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு மைதானத்தின் ஒவ்வொரு பிரிவிலும் 10 சதவீதத்திற்கு மேல் சலுகை டிக்கெட்டுகள் கொடுக்க முடியாது. இதன்படி இந்தூர் ஸ்டேடியத்தின் பெவிலியன் பகுதியில் மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்திற்கு 720 டிக்கெட்டுகள் மட்டுமே ஒதுக்க முடியும். ஆனால் ‘10 சதவீத இலவச டிக்கெட்டுகள் போதாது. பெவிலியனில் 1,250 டிக்கெட்டுகள் வேண்டும். மாநில கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள், முக்கியமான வி.ஐ.பி.க்கள், அரசு துறையைச் சேர்ந்தவர்களுக்கு இலவச டிக்கெட் கொடுக்க வேண்டி உள்ளது’ என்று மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தர முடியாது என்றால் போட்டியை தங்களால் நடத்த இயலாது என்றும் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதனால் இந்த போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது. அனேகமாக இந்த ஆட்டம் குஜராத் மாநிலம் பரோடாவுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.தொடர்புடைய செய்திகள்

1. ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.
2. ஐதராபாத் டெஸ்ட்: இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்ப்பு
ஐதராபாத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இன்னும் 3 ரன்கள் பின் தங்கியுள்ளது.
3. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரோஸ்டன் சேசின் அபார ஆட்டத்தால் சரிவை சமாளித்தது வெஸ்ட் இண்டீஸ்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஸ்டன் சேசின் அபாரமான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவை சமாளித்தது.
4. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 4-வது ஒரு நாள் போட்டி: வேறு மைதானத்திற்கு மாற்றம்
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான, 4-வது ஒரு நாள் போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
5. சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 48 ‘விங் லூங்–2’ ஆளில்லா விமானங்களை வாங்குகிறது
சீனாவிடம் இருந்து 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது.