கிரிக்கெட்

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
ஹாங்காங் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், தனது 21-வது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

* இந்திய முன்னாள் கேப்டன் கும்பிளே அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியின் மிடில் வரிசையில் இன்னும் தடுமாற்றம் இருப்பது தெரிகிறது. முன்பு போல் டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து தருவார் என்று அணி நிர்வாகம் நம்பி இருக்கக்கூடாது. டோனிக்கு இது போன்ற நெருக்கடிகளை கொடுக்காமல் அவரை சுதந்திரமாக விளையாட விடுங்கள். இளம் வீரர்களை வெற்றியுடன் முடிப்பதற்கு ஊக்கப்படுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.

* இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், ‘கருண் நாயரை மூன்று மாதங்கள் அணியில் வைத்து விட்டு ஒரு ஆட்டத்தில் கூட களம் காண வாய்ப்பு அளிக்காமல் பிறகு சரியில்லை என்று நீக்குவது எந்த வகையில் நியாயம்? வாய்ப்பு அளித்து விட்டு சரியில்லை என்று கூறி நீக்கலாம். எந்த வாய்ப்பும் கொடுக்காமல் நீக்குவது சரியா? வீரர்களை தேர்வு செய்ய எந்தவிதமான அளவுகோலை தேர்வு குழுவினர் வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவே கடினமாக இருக்கிறது’ என்றார்.

* ஹாங்காங் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் கிறிஸ் கர்டர் தனது 21-வது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். விமானி ஆக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்குவதற்காக கிரிக்கெட்டை துறப்பதாக அவர் கூறியுள்ளார்.