வீரர்களை தேர்வு செய்வது எனது பணி இல்லை: விராட் கோலி காட்டம்


வீரர்களை தேர்வு செய்வது எனது பணி இல்லை: விராட் கோலி காட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2018 1:08 PM GMT (Updated: 3 Oct 2018 1:08 PM GMT)

வீரர்களை தேர்வு செய்வது எனது பணி இல்லை என்று கருண் நாயர் அணியில் சேர்க்கப்படாத விவகாரத்தில் விராட் கோலி காட்டமாக பதிலளித்தார்.

ராஜ்கோட்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் கிரிக்கெட், 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3- இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையடுகிறது. இரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி, நாளை துவங்குகிறது. இதையொட்டி, இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட விராட் கோலி பேசியதாவது:- ”  வீரர்களை தேர்வு செய்வது என்னுடைய வேலை இல்லை.  வீரர்கள் தேர்வு தொடர்பான முடிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் எடுக்கப்படுவதாக நினைத்து மக்கள் குழம்புகின்றனர். ஆனால், அதில் உண்மை இல்லை. அனைத்து முடிவுகளையும் ஒரே இடத்தில் எடுக்கப்படுவதில்லை என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

மேலும், எல்லாவற்றையும் கூட்டாக சேர்ந்து முடிவு செய்வதில்லை என்பதையும் மக்கள் உணர வேண்டும். கருண் நாயர் நீக்கம் தொடர்பாக தேர்வாளர்கள் ஏற்கெனவே பதிலளித்துவிட்டனர். எனவே, அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, வீரர்களை தேர்வு செய்வதும் என்னுடைய வேலை இல்லை” என்றார். 

முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் 15 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இந்திய அணியில் மயாங் அகர்வால், முகமது சிராஜ், அனுமா விஹாரி, பிருத்வி ஷா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சொதப்பிய ஷிகர் தவான், முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

ஆனால், அந்த தொடரில் அணியில் சேர்க்கப்பட்ட கருண் நாயர் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து தொடரின் பாதியில் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ரிஷப் பந்த் மற்றும் அனுமன் விகாரி ஆகியோருக்கு கூட விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது நினைவு கூறத்தக்கது. 


Next Story